திருப்பூர் அருகே பீர் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
திருப்பூர்: திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பீர் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது.
திருப்பூர்: திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பீர் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது.
செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து 25,200 பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை பெரம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த லாரியானது சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலையில் வந்து கொண்டிருந்தது.
இந்த லாரியானது பல்லக்கவுண்டனம்பாளையம் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரியை முந்திச் சென்றுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் கவிழந்தது. இதில், லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் சாலையில் உடைந்து சிதறியது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த ஊத்துக்குளி காவல் துறையினர் காயமடைந்த லாரி ஓட்டுநர் செல்வகுமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பல லட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.