தமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை கடற்கரை-சேப்பாக்கம் இடையே ரயில் சேவை 2024 ஜனவரி 31 வரை ரத்து!

4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் செல்லும் அனைத்து மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சென்னை: 4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் செல்லும் அனைத்து மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை - எழும்பூர் இடையே 4 ஆவது ரயில்பாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4 ஆவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், 4 ஆவது ரயில்பாதை வழித்தடத்தில் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 31 ஆம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT