ரயில் விபத்து: ஒடிசா முதல்வருடன் தமிழக முதல்வர் ஆலோசனை
ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது மீட்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் செய்யும் என்றும் மேலும் அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வைக்க தயாராக இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இதனிடையே தமிழக அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர். ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே இரு ரயில்கள் மோதிய விபத்தில் பலர் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயில்கள் மோதிய விபத்தில் 7க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டு உள்ளே பயணிகள் சிக்கியுள்ளனர். இரவுநேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரயில் விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷாலிமர்-சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் முதற்கட்டமாக 6 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் மீட்கப்பட்டோரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாடு அறை எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர்(ஒடிசா): 91 6782262286 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.