தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்து... உறவினர்கள் செல்வதற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

DIN



சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் செல்வதற்கு சென்னையில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா கோர ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் செல்வதற்கு சென்னையில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு மேலாக சென்னை சென்டரல் - புவனேஸ்வர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்த சிறப்பு ரயில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த, பலியானோரின் உறவினர்கள் இந்த ரயில் மூலமாக புவனேஸ்வர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ நகரில் பண்பாட்டு பயிற்சி வகுப்பு

நெல்லை மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்: 2 மாணவா்கள் இடைநீக்கம்

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்

‘மகளிா் விடுதிகள் உரிமத்துக்கு மே 31வரை விண்ணப்பிக்கலாம்’

நெல்லையில் கம்பராமாயண சொற்பொழிவு

SCROLL FOR NEXT