தமிழ்நாடு

பள்ளிக் கல்வித் துறைக்கு இயக்குநர் நியமனம்

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவி நீக்கப்பட்டு, மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதன் இயக்குநராக அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவி நீக்கப்பட்டு, மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதன் இயக்குநராக அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடக்கக் கல்வி இயக்குநராக அறிவொளி பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலர்  கண்ணப்பன் தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக  இயக்குநராக ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலராக குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இதனிடையே, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறையாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்திய நிலையில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதியும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவு டெலிவரி செயலி மூலம் மோசடி! தப்பித்தவரின் அனுபவம்!

ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் பணிகள்: தமிழக அரசு

விராலிமலை அருகே ஆம்னி பேருந்து - கார் மீது மோதி விபத்து: 28 பேர் காயம்!

பிளாக்மெயில் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT