தமிழ்நாடு

முதல் முறையாக.. கோவை தனியார் பேருந்துகளில் க்யூஆர் வசதி

DIN

கோவை: சில்லறை தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் முதல் முறையாக கோவையில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிக்கெட்டுக்கு பணம் செலுத்த க்யூஆர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடைகள், ஓட்டல்கள், வங்கிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கியூஆர் கோர்டு வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பஸ் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் பல்வேறு வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசுப் பேருந்துகள் பல்வேறு தடங்களில் நிற்காமல் சென்றாலும் தனியார் பேருந்துகள் எங்கே நின்றாலும் மக்களை நின்று ஏற்றி வருவதால் என்னைக்குமே தனியார் பேருந்துகளின் மீது மக்களுக்கு ஒரு ஆர்வம் உண்டு.

டிக்கெட் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் சரியான நேரத்திற்கும் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் தனியார் பேருந்துகள் பயணிகளை ஏற்றி செல்வதால் பெரும்பாலானோர் தனியார் பேருந்தையே நம்பி இருக்கின்றனர்.

அந்த வகையில் தனியார் பேருந்து நிறுவனம் பயணிகளின் வசதிக்காக க்யூஆர் ஸ்கேன் வசதி மூலம் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நடைமுறை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தற்பொழுது நாடு முழுவதும் எண்ம (டிஜிட்டல்) மயம் ஆக்கப்பட்டு (டிஜிட்டல்) பரிவர்த்தனை தான் அனைத்து பகுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காய்கறி கடை முதல் பழக்கடைகள்,  டீக்கடை,  வங்கிகள், சாலையோரம் இருக்கக்கூடிய சிறிய உணவகங்கள் முதல் பெரிய உணவகங்கள் வரையிலும், அதே போல விமான டிக்கெட், ரயில் டிக்கெட், ஒரு பொருளை வாங்குவது முதல் எல்லாமே க்யூஆர் அல்லது எண்ம வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் பெரும்பாலான பகுதிகளில் சில்லறை தட்டுப்பாடு என்பது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம் ஒன்று பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த நிறுவனம் சார்பில் வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் 5 நகர பேருந்துகளை இயக்கி வருகிறது. 
இந்த 5 பேருந்துகளிலுமே பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கான கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு டிக்கெட் என்பதை நடத்துனரிடம் கேட்டு, கியூஆர் கோடு மூலம் அந்த பணத்தை செலுத்தி கொண்டு தங்கள் பயணத்தை தொடரலாம்.

3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, அந்த பஸ்களில் பயணிக்க கூடிய பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும் பிரச்சினையான சில்லறை பிரச்சினை என்பது குறைந்து விட்டது. 

தனியார் நிறுவனம் சார்பில் இது பற்றி கூறுகையில், பேருந்துகளில் சில்லறை பிரச்சினை என்பது எப்போதும் வரக்கூடியது தான். இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான், கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்துவதற்கு கியூஆர் கோடு வசதி உள்ளது போல பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

உடனே ஒரு மென்பொருளை உருவாக்கி அதன் மூலம் புதிய கியூஆர் கோர்டு ஒன்றை செய்து, எங்கள் நிறுவனம் சார்பில் இயங்கும் 5 பேருந்துகளிலும் ஒட்டினோம். இதனால் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டுக்காக இனி கையில் காசு கொடுக்க வேண்டாம். பஸ்சில் உள்ள கியூஆர் கோர்டை பயன்படுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். இவர்கள் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி கண்டக்டருக்கு சென்று விடும். இதற்கு என அவருக்கு ஒரு செயலி அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுக்கான பணம் செலுத்தியவர்கள் அந்த மெசேஜை காண்பித்து டிக்கெட் பெற்று பயணிக்கலாம். இதன் மூலம் சில்லறை பிரச்சினை என்பது குறைந்துள்ளது. மேலும் நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த கியூஆர் கோர்டு வசதிக்கு பயணிகளிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT