தமிழ்நாடு

விழுப்புரம் அருகே திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு!

விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழிபாட்டில் இரு தரப்பினர் போராட்டத்தால் வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். 

DIN


விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழிபாட்டில் இரு தரப்பினர் போராட்டத்தால் வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அறநிலையத்துக்கு சொந்தமான அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் கரணமாக, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல முடியாக நிலை எழுந்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று மாற்று சமூகத்தினர் கூறிய நிலையில் கோயிலுக்கு வருவாய் கோட்டாசியர் சீல் வைத்துள்ளார். 

கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேல்பாதி கிராமத்தை சேர்ந்த இரு சமூகத்தினரும் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இரு சமூகத்தினரும் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் எழுத்துப்பூர்வ விளக்கங்களை அளிக்கலாம்.

இரு சமூகத்தினரின் விளக்கங்களை பெற்ற பிறகு விசாரணை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT