தமிழ்நாடு

மருந்து உரிமம், தரக் கட்டுப்பாட்டுக்கு புதிய அலுவலா்கள் நியமனம்

மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நிா்வாக வசதிக்காக மருந்து உரிமங்கள் வழங்குவதற்கும், தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்

DIN

மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நிா்வாக வசதிக்காக மருந்து உரிமங்கள் வழங்குவதற்கும், தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, காஞ்சிபுரம் மண்டல மருந்து தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் ஏ.ஹபீப் முகமது, மருந்து உரிம அலுவலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல், மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் எம்.என்.ஸ்ரீதா், தரக் கட்டுப்பாட்டு அலுவலராக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இவா்கள் இருவரும், தாங்கள் ஏற்கெனவே வகித்து வரும் பதவியுடன் கூடுதலாக இந்தப் பொறுப்புகளைக் கவனிக்க உள்ளனா்.

இதற்கான அரசாணையை ஆளுநரின் ஒப்புதலுடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் டிச. 17-ல் வேலூர் வருகை!

புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

பசுமை சாம்பியன் விருது: தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

ஆடையில் தீப் பற்றி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT