முகப்பு
தமிழ்நாடு

கரூர் அருகே சரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

கரூர் அருகே நள்ளிரவில் சரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில்  தொழிலாளி உள்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
பகிர்:

கரூர் அருகே நள்ளிரவில் சரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில்  தொழிலாளி உள்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சிக்கனம்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத் வயது(35). இவர் தனது உறவினர்களுடன் சரக்கு வேனில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு வழிபட சனிக்கிழமை அதிகாலை வந்துள்ளார். 

கோயில் வழிபாட்டை முடித்துகொண்டு, அதே வேனில் சொந்த ஊரான கிணத்துக்கடவுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு 2 மணி அளவில் கரூர் மாவட்டம் தென்னிலை அடுத்த செம்மாண்டம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் கரூர்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் ஓட்டி   வந்த சரக்கு வேன், வினோத் ஓட்டி வந்த சரக்கு வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வினோத்துடன் வந்த அவரது உறவினர்கள் நதியா(32), முத்துலட்சுமி (46) மற்றொரு பெண் ஆகியோர் உள்பட ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். 

Advertisement

இது குறித்து தகவல் கிடைத்ததும் தென்னிலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை நேற்று ஆம்புலன்சில்  ஏற்றி கரூரில்  உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

அங்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோத், முத்துலட்சுமி, நதியா மற்றொரு பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் மற்றொரு வேனில் வந்த சமயபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்( 30), ரூபன் ( 27), வேன் ஓட்டுநர் மணிகண்டன் (42) ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வினோத்துடன் வந்திருந்த அவரது உறவினர்கள் கேசவர்தினி(14), பதினாலு வீராசாமி ( 10) உள்பட ஐந்து பேர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தென்னிலை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments