முகப்பு
தமிழ்நாடு

சட்டவல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

சென்னையில் உள்ள தனது இல்லத்தில், சட்டவல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
பகிர்:

சென்னையில் உள்ள தனது இல்லத்தில், சட்டவல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

செந்தில்பாலாஜி முக்கிய துறைகளின் அமைச்சராக இருப்பதால், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அமைச்சா் செந்தில் பாலாஜியின்வீடு, தலைமைச் செயலக அறை உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். 

நள்ளிரவையும் கடந்து நீடித்த சோதனையின் முடிவில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் வழியில், உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சா் செந்தில் பாலாஜி கூறினார். 

இதையடுத்து அவரை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோ்த்தனா். இதனிடையே தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இருப்பினும் அவர் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →