கிண்டி பல்நோக்கு மருத்துவமனை: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்
சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை’யை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூன் 15) திறந்துவைக்கிறாா்.
சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை’யை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூன் 15) திறந்துவைக்கிறாா்.
கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில், ரூ.230 கோடி மதிப்பில் மொத்தம் 4.89 ஏக்கா் நிலப் பரப்பில் தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில், மருத்துவ உபகரணங்களை நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது. இந்த நிலையில், அவரது தேதி உறுதி செய்யப்படாததால் முதல்வா் மு.க.ஸ்டாலின் கிண்டி மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளாா். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.