முகப்பு
தமிழ்நாடு

கல்வித் துறை அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்

கல்வித் துறை அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
கோப்புப்படம்
பகிர்:

கல்வித் துறை அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் (நிர்வாகம்) இரா.பூபதி பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநராக(மின் ஆளுமை) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இவருக்கு பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) பணியிடத்திற்கு முழுக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளர் அ.ஞானகொளரிக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன துணை இயக்குநர்(நிர்வாகம்) பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக பெ.அய்யண்ன் நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநராக (நிர்வாகம்) ஜி.அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக ஜோ.அஞ்சலோ  நியமிக்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →