ஆளுநர் ஆர்.என். ரவி 
தமிழ்நாடு

ஆளுநரை சந்திக்க அதிமுக சார்பில் நேரம் கேட்பு!

தமிழக ஆளுநரை ஆர்.என்.ரவியை இன்று மாலை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

தமிழக ஆளுநரை ஆர்.என்.ரவியை இன்று மாலை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டாா்.

செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனை செய்யப்பட்டதில் இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியின் துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்றக் கோரி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக ஆளுநரை ஆர்.என்.ரவியை இன்று மாலை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து, தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி மனு அளிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT