தமிழ்நாடு

அமைச்சர் செந்தில்பாலாஜி சுயநினைவுடன் இருக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளதாகவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

DIN


சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளதாகவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக நள்ளிரவு 2 மணியளவில் செந்தில் பாலாஜி அழைத்துச்செல்லப்பட்டார். 

அப்போது, காரில் செல்கையில் வழியிலேயே நெஞ்சுவலிப்பதாக நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அவர் வேதனையை வெளிப்படுத்தினார். உடனே அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்த வாய்ப்பு இல்லை என அமலாக்கத் துறையினர் கருதினர். 

இதன் விளைவாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லியை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தினர். 

அப்போது, அமைச்சா் செந்தில் பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டாா். 

காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது முடிவெடுத்த பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதும், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளதாகவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல், நீதிமன்ற தீர்ப்புக்கு பின் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

' மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்க பார்க்கிறது மத்திய அரசு '

SCROLL FOR NEXT