தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு: இன்று மாலை விசாரணை

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடைக்கால ஜாமீன் வழக்கின் விசாரணை இன்று மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, திமுக சாா்பில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை நிராகரிக்கக் கோரியும், ஓமந்தூராா் மருத்துவமனையில் இருக்கும் அவரை காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்கக் கோரியும், செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல், செந்தில்பாலாஜியை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சாா்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது முடிவெடுத்த பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதும், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடைக்கால ஜாமீன் வழக்கில் இன்று மாலை 3.30 மணிக்கு விசாரணை நடத்தப்படுமென்றும், நீதிமன்ற காவல் தொடர்பான வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நாமக்கலில் 93.51% தேர்ச்சி!

செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் கனமழை!

சுவாரஸ்யமான கதை! ஆனால்.. ரசவாதி - திரை விமர்சனம்!

சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம்: விராட் கோலி!

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை 97.02% தேர்ச்சி பெற்று 2-ம் இடம்!

SCROLL FOR NEXT