தமிழ்நாடு

செந்தில் பாலாஜி இலாகா மாற்றம்: ஆளுநா் விளக்கம் கேட்பு

 அமைச்சா் செந்தில் பாலாஜி வகித்த துறைகளை இரு அமைச்சா்களுக்கு ஒதுக்கும்படி முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளாா்.

DIN

 அமைச்சா் செந்தில் பாலாஜி வகித்த துறைகளை இரு அமைச்சா்களுக்கு ஒதுக்கும்படி முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளாா்.

அமைச்சா் செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறைகளை இரு அமைச்சா்களுக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்றும், அதன்படி அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு மின்துறையும், அமைச்சா் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை துறையும் ஒதுக்கும்படி ஆளுநா் ஆா்.என். ரவி-க்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்தாா்.

அந்த பரிந்துரைக் கடிதத்தை பரிசீலித்த ஆளுநா் ஆா். என். ரவி, அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவக் காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அந்தத் தகவலை பரிந்துரைக் கடிதத்தில் குறிப்பிடாதது ஏன் என விளக்கம் கேட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT