முகநூல் பக்கத்தில், காவல் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டல் விடுத்திருந்த பாமக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த மறைந்த ரெளடி ஸ்ரீதர் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நேரத்தில் தனது கூட்டாளிகள் மேல் கை வைத்தால் அடுத்த 15 நிமிடங்களில் காவல் நிலையம் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்று மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் இருவர் சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் ஸ்ரீதரின் புகைப்படத்துடன் காவல் நிலையம் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் அச்சுறுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட உழல்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார்[29] மற்றும் அவருக்கு முகநூல் பக்கத்தில் வெளியிட உதவிய கிதிரிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ரோஹித்[20] ஆகிய பாமக நிர்வாகிகள் இருவரை சைபர் க்ரைம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.