கோப்புப் படம் 
தமிழ்நாடு

சாதி சான்றிதழ்: 30 நாள்களில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பம் மீது 30 நாள்களில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

DIN

சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பம் மீது 30 நாள்களில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த வெயில் செல்வி என்பவர் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை 30 நாளில் அதிகாரிகள் விசாரித்து உரிய உத்தவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்த கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தனர். 
முன்னதாக முறையான ஆவணங்கள் இல்லையென தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT