தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் பதவியேற்பு
தமிழ்நாட்டின் தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
தமிழ்நாடுதமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் பதவியேற்பு
தமிழ்நாட்டின் தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டின் தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தரும், தகவல் ஆணையர்களாக முன்னாள் ஏடிஜிபி தாமரை கண்ணன், பிரியா குமார், திருமலைமுத்து, செல்வராஜ் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
அதன்படி தமிழ்நாட்டின் தலைமைத் தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இதையும் படிக்க | ரூ. 500 கோடிக்கு புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியீடு!
தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பிகார் மாநிலத்தை சேர்ந்த ஷகீல் அக்தர், 1989-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஆரூரில் காவல் துணை கண்காணிப்பாளராக முதல்முதலில் பணியில் சேர்ந்தார். மேலும், சென்னை காவல் ஆணையராகவும், சிபிசிஐடி டிஜிபியாகவும் பணிபுரிந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்த தலைமைத் தகவல் ஆணையா் மற்றும் 4 தகவல் ஆணையா்கள் பதவியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.