தூத்துக்குடியில் கடலுக்கு புறப்பட்டு சென்ற விசைப்படகு மீனவர்கள் 
தமிழ்நாடு

மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்ற தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்!

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

தூத்துக்குடியில் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பு வியாழக்கிழமை (ஜூன் 15) விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருந்தனர். 

இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு கடல் பகுதியில் காற்று 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இதையடுத்து, அன்றைய தினம் கடலுக்குச் செல்ல விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், வரும் 18 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். 

மீன் பிடிக்க விசைப் படகுகள் கடலுக்கு செல்வதை பார்க்க மீனவர்கள் பலர் குவிந்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து செல்வதால் தங்களுக்கு அதிக அளவிலான மீன்கள் கிடைக்கும் என விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT