தமிழ்நாடு

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம்: மின்வாரியம் சுற்றறிக்கை

முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு தமிழக மின்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

DIN

முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு தமிழக மின்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் பாஜக நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித் ஷா வெளியே வரும்போது மின் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து, மின் துண்டிப்புக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய உள்துறை செயலகமும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய நிர்வாக இயக்குநருக்கு மின்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், “முக்கிய பிரமுகர்கள் வருகை, பிரதான அரசு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வுசெய்து தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன், மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

குஜராத்தில் உருவானது வாக்குத்திருட்டு; 2014-ல் தேசிய அளவில் பரவியது: ராகுல்

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

உடைந்த நிலா... ஷ்ருதி ஹாசன்!

சிறிய விஷயங்களின் கடவுள்... சான்யா மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT