தமிழ்நாடு

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

DIN

தமிழகத்தில் நான்கு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 

ஜூன் 17 முதல் 19 வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும் இன்று  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர், புதுக்கோட்டை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

ஜூன் 18, 19, 20ல் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை

ஜூன் 17 முதல் 18 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்களுக்கு..

ஜூன் 17 முதல் 21 வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சபரிமலை கோயில் நடை திறப்பு!

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT