தமிழ்நாடு

செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்

செல்பேனில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

DIN

கும்பகோணம்: செல்பேனில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமேஸ்வரம் - மதுரை வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.50 மணியளவில் பேருந்து இயக்கிய ஓட்டுநர் மோகன் ஒரு கையில் செல்பேசியில் பேசியவாறு ஒரு கையில் பேருந்தை  இயக்கிய வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. 

ஓட்டுநர் பணியின்போது செல்பேனில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து, பணியிடை நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் பொது மேலாளர் சிங்காரவேல் (காரைக்குடி) ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

இதேபோல் யாரேனும் செல்பேனில் பேசிக்கொண்டு பேருந்தை இயக்குவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கொடைக்கானலில் உணவக உரிமையாளா் கைது

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

SCROLL FOR NEXT