தமிழ்நாடு

கக்கன் வழியில் எளிமையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம்: அண்ணாமலை

கக்கன் வழியில் எளிமையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

DIN

கக்கன் வழியில் எளிமையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அமைச்சரவையில், அமைச்சராக சிறப்புறப் பணியாற்றியவரும், ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவருமான, ஐயா கக்கன் பிறந்த தினம் இன்று.

நேர்மை மற்றும் எளிமையின் அடையாளமாகிய ஐயா கக்கன் அவர்களுக்கு, 1999 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, தபால்தலை வெளியிட்டு கௌரவித்தது. 

ஐயா கக்கன் வழியில், நேர்மையான, எளிமையான, அனைவருக்குமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரகணம் முடிந்தது... தமன்னா!

சிக்கல் தீா்த்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பள்ளிவாசலில் மீலாது விழா சொற்பொழிவு

குடியரசு துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்படுவார்: பிரதமர் மோடி

எஃப்எம்சிஜி-யில் நுழையும் உஷா ஸ்ரீராம்!

SCROLL FOR NEXT