தமிழ்நாடு

சென்னை எனும் ஊட்டி! டிரெண்டிங்காகும் சென்னையில் மழை ஹேஷ்டேக்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலைமுதலே மழை பெய்துவரும் நிலையில், பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

DIN


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலைமுதலே மழை பெய்துவரும் நிலையில், பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

இதனையொட்டி சென்னைரெயின்ஸ் ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது. மேலும், இணையத்தில் பலரும் சென்னை எனும் ஊட்டி என்று பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் காலைமுதலே பரவலாக மழை பெய்து வருகிறது. 

சென்னையில், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர், அயனாவரம், பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, கோயம்பேடு, அமைந்தகரை, விருகம்பாக்கம் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும், சென்னை புறநகர்ப் பகுதிகளான பூவிருந்தவல்லி, குன்றத்தூர், மதுரவாயல், வானகரம், ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் மழை (#ChennaiRains) என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது. பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனை சென்னை எனும் ஊட்டி என்று குறிப்பிட்டு இணையதளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT