சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையால், கிண்டி கத்திப்பாரா பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரில் கார் சிக்கிக்கொண்டது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன்19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் கனமழை, பலத்த காற்றால் ஈக்காட்டுத்தாங்கலில் ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை பாதிப்புகள் குறித்த புகார்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நள்ளிரவு முதலே மாநகராட்சி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | திடீர் மழை ஏன்?: தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழையால், கிண்டி கத்திப்பாரா பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரில் கார் சிக்கிக்கொண்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக சிரமப்பட்டு வருகின்றனர். வாகனங்களில் மழைநீர் புகுந்து பழுதடைந்து நின்றுவிடுவதால், வாகன ஓட்டிகள் இறங்கி தள்ளிக்கொண்டே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.