கனமழை: 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(ஜூன்19) விடுமுறை
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாடுகனமழை: 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(ஜூன்19) விடுமுறை
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன்19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதேசமயம் விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் ப்ளஸ் 2 துணைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜூன் மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கனமழை, பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை பாதிப்புகள் குறித்த புகார்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நள்ளிரவு முதலே மாநகராட்சி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரேநாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.