தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

DIN

தில்லி: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையின்போது நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாள்களில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் ஜூன் 21-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT