தமிழ்நாடு

கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதல்: 4 பேர் பலி, 70பேர் காயம் 

கடலூரில் இரண்டு தனியார்  பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் பலியாகினர். 

DIN

கடலூரில் இரண்டு தனியார்  பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் பலியாகினர். 

கடலூரிலிருந்து திருவண்ணாமலை சென்ற பேருந்தும் பண்ருட்டியிலிருந்து புதுச்சேரி சென்ற பேருந்தும் இன்று நேருக்குநேர் மோதியதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்தில் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த அங்காளம்மணி (23), சேமகோட்டையைச் சார்ந்த சீனிவாசன் (40) மற்றும் அடையாளம் தெரியாத இருவர் என மொத்தம் நான்கு பேர் பலியாகினர். 

தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாகவும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பண்ருட்டியிலிருந்து புதுச்சேரி சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது நேருக்குநேர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT