தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் இளைஞரை வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் இளைஞரை வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவைச் சேர்ந்த ஆவுடையப்பன்( என்ற) வன்னியராஜ் மகன் கணேசன்(24). இவர் டிஎம்பி காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கணேசனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு அவர் திங்கள்கிழமை காலையில் உயிரிழந்தார். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கொலை செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அண்ணாநகர் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள் மேல்முறையீடு செய்யலாம்: அமைச்சா் அர.சக்கரபாணி

சுழற்சிப் பொருளாதாரத்தால் பால் பண்ணை விவசாயிகள் வருமானம் 20% அதிகரிக்கும்: அமித் ஷா

‘ஐசியு’ செல்லும் அபாயத்தில் ‘இண்டி’ கூட்டணி: ஒமா்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மீண்டும் மோதல்!

தோ்தல் பணப் பட்டுவாடா வழக்கு: முன்னாள் அமைச்சா் மகன் மீதான வழக்கு ரத்து

SCROLL FOR NEXT