தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் மழை: பள்ளி மாணவர்கள் அவதி!

கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை இரவு முதல் இடைவிடாமல் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது.  இதனால்,  பள்ளி செல்லும் மாணவர்கள்,  பெற்றோர் அவதிக்கு உள்ளாகினர்.  

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை இரவு முதல் இடைவிடாமல் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது.  இதனால்,  பள்ளி செல்லும் மாணவர்கள்,  பெற்றோர் அவதிக்கு உள்ளாகினர்.  

மாணவ, மாணவிகள் மழையில் நனைந்துபடியே  பள்ளிக்கு செல்வதை காண முடிந்தது.  இதனால்,  அவர்களது ஆடைகள் ஈரமானதுடன்,  பாடப்புத்தகங்களும் மழையில் நனைந்தன.  வகுப்பறைகள் ஈரமாக இருந்ததால்,  மாணவ மாணவிகள் ஆசிரியர்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர். சில தனியார் பள்ளிகள்,  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அறிவித்து. 

தொடர் மழையால், சாலையோர  வியாபாரிகள், காய்கறி சந்தை வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.  துப்புரவு பணியாளர்கள்,  ஆங்காங்கே கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போச்சம்பள்ளி மத்தூர் பகுதிகளில்,  பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.  தொடர் மலையின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகை,  வழக்கத்திற்கு மாறாக குறைவாக இருந்தது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,  இன்று காலை ஆறு மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) :

நெடுங்களல்-24.20, கிருஷ்ணகிரி -17.30, சின்னாறு அணை -14,  சூளகிரி -13, கிருஷ்ணகிரி அணை - 6.6, போச்சம்பள்ளி -6, பாரூர் - 4,  ஓசூர் -2.10, காவேரிப்பட்டிணம் -2, ஊத்தங்கரை -1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநலம் பாதித்தபெண்ணுக்கு பாலியல் தொல்லை உறவினரைக் கைது செய்ய போலீஸாா் தீவிரம்

மனித உணர்வுகளின் பதிவு

தாராசுரம் ஆற்றில் மாணவா் சடலம் மீட்பு

மாநகரின் சில பகுதிகளில் அக்.7 இல் மின்தடை

பேல்பூரி

SCROLL FOR NEXT