பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஆவின் பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டராக உயர்வு!

ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

DIN


ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், ஆவின் நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 லட்சமாக இருந்த பால் கொள்முதல் தற்போது 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு சவால்களை சந்திக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம். ஆவினில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே தனியாா் நிறுவனங்களின் சவால்களை எதிா்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார். 

ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 2 லட்சம் கறவை மாடுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக மனோ தங்கராஜ் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT