அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி நிலை என்ன?: மருத்துவமனை அறிக்கை
இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரித்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து பரிசோதனை செய்ததில் இதயத்தின் முக்கியமான 3 ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பை-பாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதற்கிடையே சென்னை காவேரி மருத்துவனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு இன்று காலை 5.15 மணியளவில் மருத்துவர் ரகுராமன் தலைமையிலான குழு செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!
இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு 4 இடங்களில் அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் பல்துறை மருத்துவர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.