தஞ்சாவூர்: அரசுக் கல்லூரியின் ஆய்வகப் பூட்டை உடைத்து ஆறு கணினிகள் திருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கல்லூரியில் கணினி ஆய்வகத்தின் பூட்டு இன்று உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கள் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து ஆறு கணினிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.