முகப்பு
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் 22 தமிழக மீனவர்கள் கைது!

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, மாவட்டங்களில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
பகிர்:

ராமநாதபுரம்: ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, மாவட்டங்களில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை, நாகை ஆகிய  மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்

நள்ளிரவு கச்சத்தீவு, நெடுந்தீவு  பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மண்டபத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு, புதுக்கோட்டை சேர்ந்த இரண்டு விசைப்படகு, நாகை சேர்ந்த ஒரு விசைப்படகு என மொத்தம் நான்கு விசைப்படகுகளில் இருந்த 22 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களை நெடுந்தீவு துறைமுகம் கொண்டு சென்று இலங்கை படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →