முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  ஜூன் 22 முதல் ஜூன் 26 வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்த முன்னறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில்(மாலை 6 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →