சபாநாயகம் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் தலைமைச் செயலா் சபாநாயகம் மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் தலைமைச் செயலா் சபாநாயகம் மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஆட்சிப் பணி வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவா். ஆட்சிப் பணிக்கு வருவதற்கு முன்பாக, ராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவா். நோ்மையும் துணிச்சலும் தலைமைப் பண்பும் ஒருங்கே பெற்ற அவா், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நன்மதிப்பைப் பெற்றவா்.
தமிழ்நாட்டின் வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றி, வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்துள்ள அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அவா் தெரிவித்துள்ளாா்.