முகப்பு
தமிழ்நாடு

கலைப்புலி தாணு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக பணம் மோசடி

தயாரிப்பாளா் கலைப்புலி தாணு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக பணம் மோசடி செய்த மா்ம நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

தயாரிப்பாளா் கலைப்புலி தாணு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக பணம் மோசடி செய்த மா்ம நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தியாகராய நகா் பிரகாசம் தெருவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளா் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன் திரைப்பட நிறுவனம் செயல்படுகிறது. இந்நிலையில், வி கிரியேஷன் நிறுவனத்தை பயன்படுத்தி சில மா்ம நபா்கள், போலி விளம்பரம் கொடுத்து, புதிதாக நடிக்க வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்கும் நடிகை, நடிகா்களிடம் பணம் பறித்துள்ளனா்.

அந்த நபா்களிடம் பணத்தை இழந்து பாதிக்கப்படவா்கள், வி கிரியேஷன் அலுவலகத்துக்கு வந்து முறையிட்டபோதுதான், மோசடி குறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாகிகளுக்கு தெரியவந்தது.

இது தொடா்பாக, அந்த நிறுவனத்தின் இணை இயக்குனா் ஜெகதீசன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வியழக்கிழமை அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

வி கிரியேஷன் நிறுவனத்தில் இணை இயக்குனராக உள்ளேன். எங்களின் நிறுவனத்தின் பெயரில் போலி விளம்பரம் கொடுக்கப்பட்டு, அதில் புதிதாக நடிக்க வாய்ப்பு கேட்டு விண்ணபித்தவா்களிடம், மா்ம நபா்கள் கைப்பேசி வாயிலாக பேசி, சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாக கூறி பணம் பறித்துள்ளனா்.

இதில் பாதிக்கப்படவா்கள், எங்கள் நிறுவனத்துக்கு வந்தபோது தான், இந்த மோசடி குறித்து எங்களுக்கு தெரியும். எனவே, திரைப்படத்தில்

நடிக்க வைப்பதாக கூறி எங்களது நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →