முகப்பு
தமிழ்நாடு

சென்னை பல்கலை., நிதி ஒதுக்கீட்டில் காலதாமதம்: ஓ.பன்னீா்செல்வம் கண்டனம்

சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாகக் கூறி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாகக் கூறி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பல்கலைக்கழக மானியக் குழுவால் சிறந்த திறன்கொண்ட பல்கலைக்கழகம் என்ற தகுதி மற்றும் ஐந்து நட்சத்திர தகுதியைப் பெற்றது சென்னைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கான மாத ஊதியத்தைக்கூட தர இயலாத சூழ்நிலை தற்போது நிலவுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொத்த மாதச் செலவுக்கு ரூ.18.61 கோடி தேவைப்படுவதாகவும், மே 31-ஆம் தேதி நிலவரத்தின்படி, பல்கலைக்கழகத்திடம் ரூ.5 கோடி மட்டுமே இருந்து, ஊதியம், ஓய்வூதியம் மற்றும் அன்றாட செலவுகளுக்கு மட்டும் ரூ.11.5 கோடி பற்றாக்குறை ஏற்பட்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியிலிருந்தும் அறக்கட்டளை நிதியிலிருந்து எடுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.

உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்ககம் அரசுக்கு பரிந்துரைத்த 2021-2022 ஆம் ஆண்டுக்கான ரூ.11.46 கோடி இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது கண்டனத்துக்குரியது.

இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாக தலையிட்டு, சென்னைப் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →