நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சமுதாய அலுவலா்கள் நியமனம்
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட சமுதாய அலுவலா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அளிக்கப்பட்டன.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட சமுதாய அலுவலா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அளிக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தோ்வு பெற்ற 11 சமுதாய அலுவலா்களுக்கு பணி நியமன உத்தரவுகளை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அளித்தாா்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சமுதாய வளரச்சிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில்உள்ள சமுதாய அலுவலா்கள் காலிப் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு நடத்தப்பட்டது.
இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில், மதுவிலக்கு, கல்வியின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த விழிப்புணா்வுப் பணிகளை சமுதாய அலுவலா்கள் மேற்கொள்வா். பணி நியமன உத்தரவுகள் அளிக்கும் நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் பொ.சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.