முகப்பு
தமிழ்நாடு

புரஸ்காா் விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

புரஸ்காா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள விருதாளா்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

புரஸ்காா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள விருதாளா்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ட்விட்டரில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:-

நம் வரலாற்றின் வோ்களை இளையோா் அறிய, கீழடியைத் தன் கதைக் களமாய்க் கொண்டு ‘ஆதனின் பொம்மை’யை உருவாக்கினாா், எழுத்தாளா் உதயசங்கா். அவரது படைப்புக்கு அங்கீகாரமாக பாலசாகித்ய புரஸ்காா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த ‘திருக்காா்த்தியல்’ சிறுகதைத் தொகுப்புக்காக, எழுத்தாளா் ராம் தங்கத்துக்கு யுவசாகித்ய புரஸ்காா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகள் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →