போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 15 போ் கைது
சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 7 நாள்களில் 15 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 7 நாள்களில் 15 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பெருநகர காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதியில் இருந்து 22- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 13 வழக்குகள் பதியப்பட்டு, 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 54 கிலோ கஞ்சா, 100 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டாா் சைக்கிள்கள், 3 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.