தமிழ்நாடு

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அருண் நியமனம்: உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் மாற்றம்

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ஏ.அருண் நியமிக்கப்பட்டாா். மேலும், உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டாா்.

DIN

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ஏ.அருண் நியமிக்கப்பட்டாா். மேலும், உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டாா்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலா் பெ.அமுதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம்-தமிழக காவல்துறை தலைமையிட ஏடிஜிபி (தமிழக உளவுத்துறை ஏடிஜிபி)ஏ.அருண்-தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி (ஆவடி மாநகர காவல்துறை ஆணையா்)

கே.சங்கா்-ஆவடி மாநகர காவல்துறை ஆணையா் (தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீா்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், உளவுத்துறை ஏடிஜிபி பணியையும் உளவுத்துறை ஐஜி கே.ஏ.செந்தில்வேலன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பாா் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக காவல்துறையில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாக கருதப்படும் உளவுத்துறை ஏடிஜிபி பொறுப்பை கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கவனித்து வந்த டேவிட்சன் தேவாசீா்வாதம் திடீரென தலைமையிட பணிக்கு மாற்றப்பட்டிருப்பது காவல்துறையினரிடம் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் விரைவில் அந்த பணியிடத்துக்கு புதிதாக ஏடிஜிபி அல்லது டிஜிபி அளவிலான அதிகாரி நியமிக்கப்படுவாா் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்,ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நேரு-காந்தி குடும்பத்தினர் அநீதி இழைத்தனர்: ம.பி. முதல்வர் குற்றச்சாட்டு!

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

SCROLL FOR NEXT