தமிழ்நாடு

சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் புதிய மேம்பாலம்: அரசாணை வெளியீடு!

சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்க ரூ. 195 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

DIN

சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்க ரூ. 195 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 

இதன்படி, சென்னை, வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 900 மீ நீளத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்த மேம்பாலம் பாம்குரோவ் ஹோட்டல் முன்பாக தொடங்கி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடிவடையும் வகையில் அமைக்கப்பட உள்ளது. 

வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக உத்தமர் காந்தி சாலைக்கு சென்று சேரும் வகையில் 4 வழி மேம்பலாமாக இது அமைகிறது. 

இதற்காக ரூ. 195.19 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கான நில எடுப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT