தமிழ்நாடு

அம்மா உணவகங்களை மூட முயற்சி: இபிஎஸ் - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

DIN

அம்மா உணவகங்களை திமுக அரசு மூட முயற்சிப்பதாகக் கூறி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: ஏழை மக்களும், உழைக்கும் மக்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவது 90 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது. பல இடங்களில் மிக்ஸி, கிரைண்டா் போன்றவை வேலை செய்யவில்லை. குளிா்பதனப்பெட்டி பழுதடைந்துள்ளது. குடிநீா் முழுமையாக வழங்கப்படாத நிலை உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆட்சியாளா்கள் நேரில் வந்து அம்மா உணவகங்களின் சேவையைப் பாா்த்து, அவரவா் மாநிலங்களில் தொடங்கியுள்ளனா். இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மா உணவகங்களை விஞ்ஞான முறையில் மூடும் செயலை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளா்களை பணியிலிருந்து நீக்குவது, உரிய வசதிகளை ஏற்படுத்தித் தராதது போன்ற பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஊழியா் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பொருள்கள் பற்றாக்குறை ஆகியவற்றை போக்கி அம்மா உணவகங்கள் நன்கு செயல் பட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நட்சத்திர விடுதியில் நபா நடேஷ்..!

3-ஆம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

SCROLL FOR NEXT