தமிழ்நாடு

மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

DIN

இயக்குநர் மாரி செல்வராஜின் 'மாமன்னன்' படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் நாளை(ஜூன் 29) வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இத்திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டுமெனவும் கூறி பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

ஆனால் நீதிபதிகள், திரைப்பட தணிக்கைத்துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை விசாரிக்க மறுத்துள்ளனர். மேலும், அனைவருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளது, படம் பார்த்த 2 நாட்களில் மக்கள் மறந்து விடுவார்கள், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் காவல்துறையினர்  பார்த்துக்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT