சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணி 
தமிழ்நாடு

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்: தமிழக அணிக்கு முதல்வர் வாழ்த்து!

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அமிர்தசரஸ் குரு நானக் ஸ்டேடியத்தில் இன்று (ஜூன் 28) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹரியாணா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்று தமிழக அணி கோப்பையை கைப்பற்றியது.

தமிழக அணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளீட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், நீங்கள் தோல்வியின்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. உங்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் குழு செயல்பாடு நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளது. இதுபோன்று தொடர்ந்து உயர்ந்து நம் மாநிலத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT