தமிழ்நாடு

மேட்டூர் அருகே ரௌடி வெட்டிக் கொலை

மேட்டூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

DIN


சேலம்: மேட்டூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் சிபி (25) இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. 

கருமலைக்கூடல் காவல் நிலைய குற்ற பதிவேடு பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் புதுசாம்பள்ளியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மேட்டூர் பகுதியில் நள்ளிரவில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்ற தகவல் மட்டும் முதலில் போலீசாருக்கு கிடைத்தது. சுமார் ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு சம்பவ இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

கொலை செய்யப்பட்டு கிடந்த சிபியின் உடலை பார்த்த அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர். சடலத்தை உடல் கூறாய்வுக்கு அனுப்ப விடாமல் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி கருமலைக்கூடல் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நடந்த கொலை வழக்கில் சிபி தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

எனவே, அந்த கொலைக்கு பழிக்குப் பழிவாங்க சிபி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேட்டூரில் பழிக்குப் பழியாக ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT