சிவ்தாஸ் மீனா 
தமிழ்நாடு

அடுத்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா?

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனாவை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், அடுத்த தலைமைச் செயலாளரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை.

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தலைவராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் துறை செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள எஸ்.கே. பிரபாகர் ஆகிய மூவர் இறுதிப் பட்டியலில் இருப்பதாக தெரிகிறது.

இவர்களில் ஒருவரை தேர்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஒரு வாரமாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் துறை செயலராக உள்ள சிவ்தாஸ் மீனாவை அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்க இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு சற்றுநேரத்தில் வெளியிட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT