தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN



புதுதில்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70 ஆவது பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடுகிறது. 

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் என பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT